தேசிய பொதுநிலையினர் தினம் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அன்றை தினம் பொதுநிலையினர் தின சிறப்புத்திருப்பலி யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குருமுதல்வர் அவர்கள் தனது மறையுரையில் திருமுழுக்கின் ஊடாக பொதுநிலையினர் பெற்றுக் கொண்ட திருத்தூதுப் பணி கத்தோலிக்கத் திரு அவைக்கு முதன்மையானது என்பதனை சுட்டிக்காட்டி பல சவால்களையும் தடைகளையும் தாண்டி யாழ். மறைமாவட்டத்தில் பொது நிலையினர் சிறப்பாக பணியாற்றிவருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் 2023ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற ஆயர்கள் மாமன்றம் வெற்றி பெறுவதற்க்கு பொது நிலையினரின் பங்களிப்பு முக்கியமானது என்றும் மாநாடு வெற்றி பெற அனைவரையும் சிறப்பான முறையில் இதற்காக செபிக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டார். யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பேராலய உதவிப் பங்குத் தந்தை அருட்திரு யோண் குருஸ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக் கோட்டங்களில் இருந்து அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

By admin