புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை கமலானந்தன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன. திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை ஆலய பங்கு இளையோரின் ஏற்பாட்டில் விளையாட்டுப்போட்டி முன்னெடுக்கப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

 

By admin