புனித வின்சன் டி போல் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய திருப்பலியை புனித வின்சென்டிப்போல் சபையினர் சிறப்பித்ததுடன் தொடர்ந்து சிறுவர்தின நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.
அருட்சகோதரி ஆசீர்வாதம் யக்குலின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.