யாழ் மறைமாவட்டத்தில் பணியாற்றும் புனித வின்சன்டி போல் சபையின் மத்தியசபை உறுப்பினர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

8ம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆயர் அவர்கள் ஏழைகள் மட்டில் அக்கறையோடும் தேவையில் உள்ளவர்களை இனம் கண்டு அவர்களை தேடி சென்று ஆற்றும் இவர்களின் பணியை பாராட்டி இவ்வருடம் தேசிய சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக இளையோர் பந்திகளை உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பு புனித வின்சன்டி போல் சபையின் மறைமாவட்ட ஆன்மீகக்குரு அருட்திரு நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

By admin