அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள புனித மொண்பர்ட் சர்வதேச பாடசாலை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களினால் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து பாடசாலையில் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்துவைத்த உரையாற்றிய யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் மொண்பர்ட் துறவற சபை அருட்சகோதரர்கள் பாடசாலைகளை நிர்வகிப்பதில் மிகவும் அர்ப்பணமுள்ளவர்கள்என்பதையும், இச்சர்வதேச பாடசாலை யாழ் மறைமாவட்டத்தின் நீண்ட கால கனவு. இக் கனவு நனவாகியது தன்னுடைய மனதிற்கு மிகுந்த மகிழ்சியை தருவதையும் சுட்டிக்காட்டி, அருட் சகோதரர் மரிய பிரகாசம் அவர்களின் அயராத உழைப்பையும், நிர்வாக திறனையும் பாராட்டி, வளமான எதிர்காலம் ஒன்று தீவகம் மற்றும் முழு யாழ் மக்களுக்கும் கிடைக்க உள்ளதையும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் குருக்கள், துறவியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin