முதல் கொரிய கத்தோலிக்க அருட்தந்தையும் மறைசாட்சியும் புனிதருமான புனித ஆண்ட்ரூ கிம் டே கோனின் 177 ஆவது ஆண்டு நினைவு நாளையும் வத்திக்கான் மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60ஆவது ஆண்டையும் நினைவுகூரும் முகமாக புனித ஆண்ட்ரூ கிம் டே கோனின் உருவச்சிலை 16ஆம் திகதி சனிக்கிழமை வத்திக்கானில் உள்ள சென். பீற்றர்ஸ் பசிலிக்காவின் வெளிப்புற சுவரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கொரிய சிற்பி ஹான் ஜின்-சப் என்பவரால் 3.8 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட பளிங்குச் சிலைக்கான நிதியுதவியை கொரிய ஆயர்கள் மாநாடு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin