15.11.2020 ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களினால், புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.புனித மடுத்தினார் குருமடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது குருமடம்.

இது 150 ஆண்டுகளை தாண்டி இன்றும் யாழ் மறைமாவட்ட அருட்பணியாளர்களை உருவாக்கும் சிறிய குருமடமாக திகழ்ந்து வருகின்றது. 151வது ஆண்டுக்குள் காலடி பதிக்கும் இக்குருமடம் யாழ் மறைமாவட்ட ஆயரின் வழிநடத்தலில் தற்போதைய குருமட அதிபர் அருட்திரு பாஸ்கரன் அவர்களின் முயற்சியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது.

By admin