ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான ‘மஹாகவி’ உருத்திரமூர்த்தி அவர்களால் 1969ஆம் ஆண்டு எழுதப்பட்ட “புதியதொரு வீடு” நாடகம் யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்டு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டன.
மீனவக் குடும்பமொன்றினை மையப்படுத்திய ‘புதியதொரு வீடு” புயல் ஒன்றினூடாக சிதைவுறும் குடும்பத்தில் ஏற்படும் நெருக்கீடுகளையும் அவற்றிற்கான தீர்வுகளை அவர்கள் தேடமுயலும்போது எதிர்பாராது எழுகின்ற சவால்களை எதிர்கொள்ளும் பாங்கினையும் உள்ளடக்கியது.
இந்நாடகம் க.பொ.த சாதாரணதர கற்கைநெறியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை பயிலும் மாணவர்களுக்கான பாடநூலாக அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin