புங்குடுதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி சனிக்கிழமை புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
தீவக மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை பேணாட் றெக்னோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்த திருப்பலியில் 17 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.