பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சன் டி போல் சபை அங்குரார்ப்பன நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் தலைமையில் புலோப்பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட வின்சன் டி போல் சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் கலந்துகொண்டு பங்கு வின்சன்டிப் போல் சபையை ஆரம்பித்து வைத்தார்.வின்சன்டிப்போல் சபையின் யாழ் மறைமாவட்ட மத்திய குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

By admin