பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு 5ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முழங்காவில் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை நதீப், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin