பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பன நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.
 
மறைக்கோட்ட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 5 பிரசீடியங்களை இணைத்து மரியாயின் சேனை கியூரியா உருவாக்கப்பட்டதுடன் அதற்கான நிர்வாக உறுப்பினர் தெரிவும் இடம்பெற்றது.
 
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்நிகழ்வைவழிப்படுத்தினார்கள்.
 
திருச்செபமாலையோடு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் அருட்தந்தை பெனற் அவர்களின் இறைவார்த்தை தியானத்தை தொடர்ந்து கியூரியா நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.
 
கரவெட்டி பிரசீடியத்தைச் சேர்ந்த பிறேமசீலி அவர்கள் தலைவராகவும் பருத்தித்துறை பிரசீடியத்தைச் சேர்ந்த மேரி மெக்ரலின் அவர்கள் உபதலைவராகவும் கரவெட்டிப் பிரசீடியத்தைச் சேர்ந்த சுகந்தா அவர்கள் செயலாளராகவும் பருத்தித்துறை பிரசீடியத்தைச் சேர்ந்த சஜீத்தா அவர்கள் உபசெயலாளராகவும் மணல்காட்டுப் பிரசீடியத்தைச் சேர்ந்த மேரி லொறென்சியா அவர்கள் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

By admin