பருத்தித்துறை திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு 18ஆம் சனிக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றமேஸ் மற்றும் திருக்குடும்ப கன்னியர் மட ஆலோசகர் அருட்சகோதரி புறூஸ் மேரி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக கருத்தமர்வை நெறிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் 53 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.