பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர்வார சிறப்பு நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் வழிநடத்தலில் கடந்த வாரம் நடைபெற்றது.

3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இளையோர் மன்றக்கொடியேற்றப்பட்டு தேசிய இளையோர்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

வாரத்திருப்பலிகளில் இளையோர் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்ததும் மறையுரைகள் ஆற்றப்பட்டு 9ஆம் திகதி சனிக்கிழமை தும்பளை லூர்து அன்னை கெபியில் நடைபெற்ற திருப்லியை தொடர்ந்து இளையோருக்கான கருத்தமர்வும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

தொடர்ந்து 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்கு இளையோர் அனைவரும் இணைந்து தேசிய இளையோர்தின சிறப்புத்திருப்பலியில் பங்குபற்றி அன்றைய நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.

கருத்துரைகள், கலந்துரையாடல்கள், விளையாட்டு நிகழ்வுகள், சிறப்பு நற்கருணை ஆரதானை என்பவற்றுடன் இளையோர் ஒன்றியத்தினரும் புனித தோமையார் பாடசாலை மாணவிகளும் இணைந்து போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து ஒன்றினையும் ஆற்றுகை செய்தனர்.

திருப்பலியை தொடர்ந்து நடைபெற்ற இத்தெருக்கூத்து ஆற்றுகை நிகழ்வை ஏராளமானவர்கள் பார்வையிட்டதுடன் இவ்வாற்றுகை நிகழ்வு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.

இவ் இளையோர்வார நிகழ்வுகளைஅமலமரித்தயாகிகள் சபையின் ஞானதீப இயக்குனர் அருட்தந்தை சுதர்சன் அவர்கள் வழிநடத்தியிருந்தார்.

By admin