தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள ஊர்காவற்றுறை பங்கில் இயங்கிவரும் மரியாயின் சேனை பரலோக இராக்கினி பிரடசீடியத்தினர் தமது சபை ஆரம்பித்ததன் 18ஆம் ஆண்டு நிறைவு தினத்தை 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடினார்கள்.

இந்நாளில் பங்குத்தந்தை அருட்திரு ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நன்றித்திருப்பலியில் மரியாயின் சேனையினர் இணைந்து திருப்பலியை சிறப்பத்தார்கள். திருப்பலியில் மறையுரையாற்றிய அருட்திரு ஜெயறஞ்சன் அவர்கள், அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள் எனப்பணித்த அன்னையின் வார்த்தைக்கேற்ப நம்மை வாழ அழைப்பு விடுத்ததுடன், புனித யோசேவ்வாஸ் பெருவிழாவை கொண்டாடும் நாம் நம் இளையோருரையும் நற்செய்திப்பணியில் ஈடுபடுத்தும் நல் மாந்தராய் திகழவும் வேண்டுமெனவும் எடுத்துரைத்தார். திருப்பலியை தொடர்ந்து மதியபோசன பகிர்வு, பிற்பகல் 6 மணி வரை தொடர் செபமாலை செபிக்கும் நிகழ்வுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

By admin