நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த வெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை 13 ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்வருடம் 25வது யூபிலி ஆண்டாக சிறப்பிக்கப்பட்ட இத்திருயாத்திரை நிகழ்வில்பெல்ஜியம் பெனு அன்னையின் திருத்தலத்தில், சமயம், மொழி, இனம் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் மருதமடு அன்னையின் 6அடி உயரம் கொண்ட திருச்சுருபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இச்சிறப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்களும் பெனு மறைமாவட்ட ஆயரின் சிறப்பு பிரதிநிதியான டெறிக் டே வியுகிளர் (Deveukelar) அவர்களும் இணைந்து சிறப்பித்தனர்.அன்றைய நாளில் திருமலை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் குணமாக்கல் வழிபாடும் நடைபெற்றது.

By admin

You missed

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று 28ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து 28ஆம் திகதி மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.