நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். போதனா வைத்தியசாலையின் ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நிஜந்தன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin