செபமாலைதாசர் துறவற சபையைச் சேர்ந்த அருட் சசோதரர் அருண் சிங். அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைபாட்டு நிகழ்வு அச்சுவேலி புனித செபமாலை மாதா ஆச்சிரமத்தில் 20 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

மாலை 5.00 மணிக்கு செபமாலைத்தாசர் சபையின் மாகாண முதல்வர் அருட்திரு ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர், அமலமரித் தியாகிகள் சபையின் யாழ். மாகாண முதல்வர், குருக்கள் மற்றும் அருட்சகோதரிகளென பலரும் இதில் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin