நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நாரந்தனை பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் கடந்த 27ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெற்றன.

அருட்தந்தை அஜந்நன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் 5பேர் கொண்ட 5 அணிகள் பங்குபற்றியிருந்தன. 100ற்கும் அதிகமான இளையோர்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட இப்போட்டியில் கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் கல்லூரி அதிபர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin