நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பற்ற அரசியல் தலைமைகளே காரணம் என யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தமது உயிர்ப்பு ஞாயிறு செய்தியில் தெரிவித்துள்ளார்.

நமது நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெரும் நெருக்கடி நிலைக்குள் சிக்குண்டு ஓருபோதும் சந்திக்காத ஓரு இக்கட்டான நிலையை தற்போது சந்தித்துள்ளதை சுட்டிக்காட்டி இதற்கு, இந்நாடு பௌத்த சிங்களவருக்கே சொந்தமென கூறி ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசியல் இருப்பை தக்கவைக்க இன மத பாகுபாட்டுடன் மக்களை ஆட்சி செய்த சுயநலப்போக்கே காரணமென குறிப்பிட்டுள்ளார். இன்று குறிப்பாக தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு, தமது தலைவர்களாக அவர்கள் தேர்ந்தெடுத்தவர்களே காரணம் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin