இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான அரசநாடக விழாவில்

யாழ். திருமறைக் கலாமன்ற கலைஞர்களில் முக்கியமானவரும் மன்ற நாட்டுக்கூத்து துறையின் பொறுப்பாளராகவும் பணியாற்றும் கூத்துக் கலைஞர் கலாபூசணம் யூல்ஸ்கொலின் அவர்கள் நாடக கீர்த்தி விருதினை பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேசத்தை சேர்ந்த கூத்துக் கலைஞரான இவர் இலங்கை நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை மேன்மைப்படுத்தி நாடகத்துறையின் அதி உச்ச விருதாகிய நாடக கீர்த்தி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

By admin

You missed

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று 28ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து 28ஆம் திகதி மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.