நவாலி சென் பீற்றேஸ் இளையோர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் சென் பீற்றேஸ் ஆலய முன்றலில் 25.07.2021 ஞாயிற்று கிழமை அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. 1995 ஆம் ஆண்டு நவாலி புனித பேதுறுவானவர் ஆலயத்தில் நடைந்தேறிய விமானக்குண்டு வீச்சில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த நிகழ்வை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. வினோதினி, வலி தென் மேற்கு, சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு. றஜீவன், சண்டிலிப்பாய் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரினோராச், பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், மற்றும் நாவாலி சென் பீற்றஸ் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

அன்றைய இரத்ததான முகாமில் 23 குருதி கொடையாளர்கள் இணைந்து குருதித்தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin