குழமங்கால் பங்கு எல்லைக்குட்பட்ட மாவட்டபுரம் கீரிமலை வீதியில் அமைந்துள்ள நல்லிணக்கபுரம் கிராமத்தில் அமையப்பெறவுள்ள ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்திரு பாஸ்கரன் அவர்களின் தலைமையில் அங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்திரு நேசநாயகம் அவர்கள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் உதவியுடனும் அப்பிரதேசமக்களின் உழைப்புடனும் இப்புதிய ஆலயத்தினை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லிணக்கபுரம் மீள்குடியேற்ற கிராமம் 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 53 குடும்பங்கள் அங்கு குடியேற்றப்பட்ட வாழ்ந்து வருககின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin