நல்லாயன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி அங்கு நடைபெற்றது.
அவ் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் பீடப்பணியாளர்கள் சிறப்பித்த காலை திருப்பலியை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.