மட்டக்களப்பு மறைமாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறுமைக்கான காரணங்களைக் கவனத்தில் கொள்ளலும் விவசாயிகளுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இச்செயற்திட்டத்தில் வளர்க்கப்பட்ட மீன்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு செங்கலடி பிரதேச செயலக பிரிவிலுள்ள புல்லுமலை பிரதேசத்தில் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் எகட் கரிதாஸ் நிறுவன இயக்குனர் அருட்திரு யேசுதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

By admin