தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வுகள் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் குருமடத்தில் 14ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

குருமடத்தில் இயங்கி வரும் தனிநாயகம் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் குருமட மாணவர்களின் ஓழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் காலை குருமட சிற்றாலயத்தின் முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு தொடர்ந்து நன்றித்திருப்பலி இடம்பெற்றது. நன்றித்திருப்பலியை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்கள் தலைமை தாங்கி ஓப்புக் கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து பொங்கல் பரிமாறப்பட்டு அன்றைய நாளை சிறப்பிக்கும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வில் குருமட அதிபர் உருவாக்குனர்கள் மாணவர்களென பலரும் இணைந்து சிறப்பித்தார்கள்.

By admin