தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு பூநகரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாடியடி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான பாசறை நிகழ்வும் இடம்பெற்றன.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை சந்திரதாஸ் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். தொடர்ந்து பாசறை நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன.
மறையாசிரியர்களுக்கான பாசறை நிகழ்வை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தையார்களான சந்திரதாஸ் மற்றும் டனிஸ்ரன் ஆகியோரும் மாணவர்களுக்கான பாசறை நிகழ்வை அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை அமிர்தராஜ் மற்றும் திரு. போல் ஆகியோரும் இணைந்து நெறிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் 20 வரையான மறையாசிரியர்களும் 65 வரையான மறைக்கல்வி மாணவர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.