பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியும் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் முதலாம் இடத்தைப்பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.
25ஆம் திக தி கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சிற்றி லீக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் மன்னார் புனித சவேரியார் கல்லூரியை எதிர்த்து யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியும் கொழும்பு ஹமீட் அல்ஹசைனி கல்லூரியை எதிர்த்து இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் போட்டியிட்ட நிலையில் இரு அணிகளும் முதலிடத்தைப்பெற்று தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

By admin