இவ்வருடம் உரோமாபுரியில் நடைபெறவுள்ள ஆயர் மன்ற மாநாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய யாழ். திரு அவையை கூட்டொருங்கியக்க திரு அவையாக மாற்றுவதில் துறவற சபையினருக்கு பெரும் பொறுப்பு உண்டென யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கூட்டொருங்கியக்க திரு அவை பற்றி இலங்கை ஆயர் மன்றம் வெளியிட்ட இறுதி அறிக்கையில் அடங்கியுள்ள முக்கியமான விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மறை மாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபையினரின் பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்டபோதே குரு முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாவலன் மண்டபத்தில் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் யாழ். மறை மாவட்டத்தில் பணியாற்றும் துறவறசபைகளை சேர்ந்த 75 பிரதிநிதிகள் வரையில் கலந்து கொண்டார்கள்.
யாழ். மறை மாவட்ட துறவற சபைகளின் இணையமும் குருக்கள் துறவிகள் ஆணைக் குழுவும் இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்

By admin