தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, சாட்டி, நாரந்தனை, ஊர்காவற்துறை, எழுவைதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய பங்குகளை சேர்ந்த 40 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin

You missed

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று 28ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து 28ஆம் திகதி மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.