இளையோர் மத்தியில் ஒற்றுமையை பலப்படுத்தும் முகமாக தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விளையாட்டு நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்கள் முதன்மை விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்போட்டியில் தீவக மறைக்கோட்ட பங்குகளிலிருந்து நூற்றுக்கும் அதிகமான இளையோர்கள் மிகவும் ஆர்வமாக பங்குபற்றியிருந்தனர்.

By admin