யாழ். மறைமாவட்டத்தின் தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
வவுனியா கோமரசன்குளம் கல்வாரிப் பூங்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட இத்தவக்கால யாத்திரையில் சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்டப் பங்குகளில் இருந்து 80வரையான இளையோர்கள் இணைந்து கொண்டனர்.