தீவகம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை யாழ். மாகண அமலமரித் தியாகிகள் சபையின் புனித வளனார் சிறிய குருமட உபஅதிபர் அருட்தந்தை சியான்ஸ்ரன் ஜெனிஸ் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
15ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றமும் 16ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin