தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
அன்றைய தினம் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் தாத்தாக்கள் பாட்டிகள் தமது பேரப்பிள்ளைகளால் பவனியாக அழைத்து வரப்பட்டு திருப்பலியின் ஆரம்பத்தில் புனிதர்களான அன்னாள் சுவக்கீன் படத்திற்கு அவர்கள் மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்தார்கள்.
 
திருப்பலியை தொடர்ந்து அவர்களுக்கான விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றது.

By admin