தீவக மறைக்கோட்டத்திற்குட்பட்ட புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இறைமக்களினால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

புத்தளம் புனித அன்னாள் ஆலயத்திற்கு யாத்திரையாக சென்ற இவர்கள் அங்கு திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி ஆகியவற்றில் பங்கெடுத்தனர். இத்தவக்கால யாத்திரை புங்குடுதீவு பங்குதந்தை அருட்திரு எட்வின் நரேஸ் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

By admin