யாழ் மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சமூக வலைத்தளங்க;டாக முன்னெடுக்கப்பட்ட தனிப்பாடல் போட்டி மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக மைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கான சன்றிதழ்களும் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கபட்டன.

பாடல் போட்டியில் 49பேரும் பாலன்குடில் போட்டியில் 25பேரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin