திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநரும், யாழ். கல்வி வலய நாடகமும் அரங்கியலும் பாடஆசிரிய ஆலோசகரும், ஈழத்தின் கவனத்திற்குரிய அரங்க ஆளுமையுமான திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் ‘ஜீவப்பிரயத்தனம்” என்னும் ஏழுநாடகப் பிரதிகளை உள்ளடக்கிய புதிய நாடக நூல் வெளியீடு கடந்த 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமறைக் கலாமன்றத்தின் ஊடக இணைப்பாளர் செல்மர் எமில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணியும் மூத்த நாடகக் கலைஞருமான தேவராஜா அவர்கள் கலந்துகொண்டார்.

நூலின் முதற்பிரதியை பிரதம விருந்தினர் வழங்க அதனை யாழ்ப்பாணம் கிங்ஸ்ரன் எலக்ரோனிக் உரிமையாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ரமேஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைய நடைபெற்ற இந்நூல் வெளியீட்டில் அரங்கச் செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

By admin