செய்தியாளர் ஊடக தூதுமடல் எனும் ஊடகத்துறை சார்ந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பெரிய தோட்டம் கடற்கரை வீதியிலுள்ள ஆயர் சவுந்தரம் ஊடக நிலையத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் விரிவுரையாளர் கிருத்திகா தர்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விஜயசுந்தரம் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

By admin