சக்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய வலய மக்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப்பாதை தியானம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்திரு பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் ஆலய மக்கள் பக்தியுடன் பங்குபற்றினார்கள். சிலுவைப்பாதை தியானத்தின் இறுதியில் திக்கம் மடுமாதா சிற்றாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.