சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் குருக்கள் துறவிகள் இறைமக்களென ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
2014ஆம் ஆண்டு அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் காலத்தில் இவ் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தொடர்ந்து அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் காலத்தில் கட்டிடப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் காலத்தில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் வாழ் மக்களின் அயராத முயற்சியினால் கட்டுமான பணிகள் நிறைவடைந்து இவ் வாலயம் திறந்துவைக்கப்பட்டடுள்ளது.