சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 6ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 5ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
நற்கருணைவிழா திருப்பலியை மிருசுவில் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்கள் தலைமைதாங்கி நிறைவேற்றினார். திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
 
திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை கலைநிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன.
 

By admin