தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் ஏற்பாட்டில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் புனித லிகோரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சிகள், குழுச்செயற்பாடுகள் என்பவற்றுடன் மதிய விருந்துபசாரமும் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
 
இவ்ஒன்றுகூடல் நிகழ்வில் 30வரையான இளையோர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin