யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் இவ்வருடம் உயர்தர பரீட்சையை மேற்கொண்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் பயிற்சியை மேற்கொண்ட இளையோர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந் நிகழ்வு யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் ஓழுங்கு படுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.

By admin