யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமாதான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு அண்மையில் இளவாலை மாரீசன்கூடல் பிரதேசத்தில் அமைந்துள்ள சென் லூட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

நான்கு அணிகள் பங்குபற்றிய இப்போட்டியின் இறுதி நிகழ்வில் முதலாம் இடத்தினை சென் லூட்ஸ் விளையாட்டு கழகமும் இரண்டாம் இடத்தினை யங்கென்றிஸ் விளையாட்டு கழகமும் மூன்றாம் இடத்தினை நியூ ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன. இறுதிப் போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணக் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்திரு இயூஜின் பிரான்சிஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாரிசன்கூடல் பங்குத்தந்தை அருட்திரு கான்ஸ்போவர் அவர்களும், இளவாலை பங்குத்தந்தை அருட்திரு எரிக்றொசான் அடிகளும் கலந்து சிறப்பித்தனர்.

By admin