சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் பங்கு இளையோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்கள் பிரதம் விருந்தினராகவும், யாழ். பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு கந்தசாமி மனோகரன், J/73 கிராம சேவையாளர் திருமதி கயலக்சி, யாழ். கியூடெக் கரித்தாஸ் உறுப்பினர் திரு. அன்றே ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்துடன் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

By admin