சர்வதேச உணவு தினம் 16ஆம் திகதி சனிக்கிழமை நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு செயற்திட்ட ஒருங்கிணைப்பில்; இயக்குனர் அருட்திரு செபஜீவன் அவர்களின் தலைமையில் இத்தினத்திற்கான விசேட நிகழ்வு நேற்றைய தினம் அங்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியோடு ஆரம்பமான இந்நிகழ்வில் சமூகமட்ட பயனாளிகள் பங்குத்தந்தையர்கள் தேசிய நிலைய பணியாளர்கள் கியூடெக் வன்னி நிறுவன பணியாளர்கள் ஆகியோர் இணையவழி நிகழ்நிலை மூலமும் நேரடியாகவும் இணைந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஆரோக்கியமான உணவு பழக்கம் எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி அருமைநாதன் கருத்தமர்வினை நடாத்தினாh. இதன்போது இந்நிகழ்விற்கு வருகைதந்தவர்களுக்கு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால ஞாபகார்த்தமாக பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin