சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கிலுள்ள கத்தோலிக்க ஆசிரியர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்வபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து ஆசிரியர் தின நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இத்தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

By admin