பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாரபட்சமற்ற முறையில் நீதியை நிலைநாட்ட மனித நேயம்கொண்ட அனைவரும் முன்னவர வேண்டுமென வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியமும் 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இதுதொடர்பான ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில் சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின்சூத்திரதாரிகளை வெளிக்கொணர்ந்து அதுதொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி அம்மக்களுக்கு நீதி கிடைக்க மேற்கொள்ளவேண்டிய சர்வதேச விசராணையின் முக்கியத்துவத்தை வலியுறித்துயுள்ளதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கபட்ட அநீதிகளுக்கு எதிரான நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சனல் 4 ஆவணப்படத்தின் உண்மைத்தன்மைகளை கண்டறிய கோருபவர்கள் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட போர்குற்ற ஆவணப்படங்களின் உண்மைத்தன்மைகளை நிராகரித்து சர்வதேச விசாரணையையை ஏற்றுக்கொள்ள மறுத்த பக்கசார்பான மனநிலைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிக்கப்படுவார்களெனும் பேரருட்தந்தை மல்கம் கருதினால் றஞ்சித் அவர்களின் கூற்று நாட்டில் மேலும் குழப்பத்தை உருவாக்கி குற்றவாளிகளை பாதுகாக்க வழிவகுக்கும் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாரபட்சமற்ற முறையில் நீதியை நிலைநாட்ட மனித நேயம்கொண்ட அனைவரும் முன்னவர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

By admin