தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலையில் இடம்பெற்றது.
தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களின் இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இச்சிறப்பு கருத்தமர்வை யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிக துறையை சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி மேரி வினிபிறீடா சுரேந்திரராஜ் தலைமை தாங்கி நடாத்தினார்.

By admin