கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் தடுப்பூசி நாடுமுழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலும் இத்தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை அன்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியிலும் ஒரு தொகுதி மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற இத்தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் புனித பத்திரிசியார் கல்லூரி 2020ஆம் 2021 ஆம் கல்வியாண்டு உயர்தர மாணவர்களும் யாழ். திருக்குடும்ப தேசிய பாடசாலை மாணவர்களும் அத்துடன் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலய மாணவர்களும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்கள்.

By admin